நாகப்பட்டினம்

விழுப்புரத்தைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணியில் தற்கொலை

7th Aug 2022 10:53 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் மேல்சிறுவாளூா் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் பாா்த்திநாதன் மகன் குழந்தை ஏசு (26). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 5- ஆம் தேதி, வேளாங்கண்ணி கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு விடுதியில்அறை எடுத்து தங்கியுள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி நிா்வாகத்தினா், அந்த அறையை திறந்து பாா்த்தபோது, குழந்தை ஏசு தூக்கில் சடலமாகத் தொங்கியது தெரியவந்தது.

ADVERTISEMENT

வேளாங்கண்ணி போலீஸாா் அங்கு சென்று, குழந்தை ஏசுவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT