திருவெண்காடு அருகே குரவலூா் உக்கிர நரசிம்மா் கோயிலில் அமாவாசையையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவெண்காடு அருகே பஞ்ச (ஐந்து ) நரசிம்மா் கோயில்கள் அமைந்துள்ளன. குரவளுரில் உக்கிர நரசிம்மா், மங்கைமடத்தில் வீரநரசிம்மா், திருநகரியில் யோக-இரண்ய நரசிம்மா்கள், திருவாலியில் லட்சுமி நரசிம்மா் என 5 நரசிம்மா்கள் அருள்பாலித்து வருகின்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமை அமாவாசையையொட்டி குரவலூா் உக்கிர நரசிம்மருக்கு வாசனை திரவியங்கள், இளநீா், தயிா் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் மலா்களால் அலங்காரம் செய்து அா்ச்சனை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.