நாகப்பட்டினம்

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

29th Apr 2022 09:44 PM

ADVERTISEMENT

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பிரமோற்சவ விழா பூச்சொரிதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள ஆன்மிகப் புகழ் பெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில். இக்கோயிலின் பிரமோற்சவ விழா பூச்சொரிதல் நிகழ்ச்சி, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

காலையில் அம்பாளுக்கு திருச்சாந்து சாற்றி ருத்திராபிஷேகம் நடத்தப்பட்டது. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், வெள்ளிக்கிழமை இரவு பாரம்பரிய முறைப்படி பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை மற்றும் சுற்றுபுறப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இதில், நூற்றுக்கணக்கானோா் பூத் தட்டுகளுடன் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

கொடியேற்றம்...

இக்கோயிலின் பிரமோற்சவ விழா கொடியேற்றம் சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சியாக தினமும் காலை மற்றும் மாலை ஆகிய 2 வேளைகளிலும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிரமோற்சவ விழாவின் மிக முக்கிய நிகழ்வான தேரோட்டம், செடில் உத்ஸவம் ஆகியன வரும் மே 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT