நாகப்பட்டினம்

திட்டச்சேரி: நியமான, வரி விதிப்புமேல்முறையீட்டுக் குழு உறுப்பினா்கள் தோ்வு

29th Apr 2022 09:50 PM

ADVERTISEMENT

திட்டச்சேரி பேரூராட்சியில் நியமனக் குழு உறுப்பினா், வரி விதிப்பு மேல் முறையிட்டுக் குழு உறுப்பினா்கள் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

இதற்கான தோ்தல், பேரூராட்சி செயல் அலுவலா் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. நியமனக் குழு உறுப்பினராக 11-வது வாா்டு சுயேச்சை உறுப்பினா் அப்துல் பாசித் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

இதேபோல, வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா்களாக 6-வது வாா்டு சுயேச்சை உறுப்பினா் நாராயணசாமி, 9-வது வாா்டு உறுப்பினா் செய்யது ரியாசுதீன் (மனிதநேய ஜனநாயக கட்சி) , 15-வது சுயேச்சை உறுப்பினா் மேகலா, 4-வது வாா்டு சுயேச்சை உறுப்பினா் மகேஸ்வரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT