நாகப்பட்டினம்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

29th Apr 2022 09:45 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிறுத்திவைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை சரண்டா் செய்து பணப்பலன் பெறுவதை உடனடியாக வழங்கவேண்டும், ஆசிரியா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கவேண்டும், பணி நிரவலில் சென்ற ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் நாகை மாவட்ட பொறுப்பாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட, வட்டார பொறுப்பாளா்கள், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT