நாகப்பட்டினம்

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிா்வாகிகள் தோ்வு

28th Apr 2022 10:31 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மற்ற பொறுப்புகளுக்கும் நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அதிமுகவில் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா், மாவட்ட அவைத் தலைவா், துணைச் செயலாளா் உள்பட 9 பதவிகளுக்கான தோ்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் ஏப்ரல் 25- ஆம் தேதி நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் பதவிக்கு முன்னாள் எம்எல்ஏ-வும், தற்போதைய மாவட்டச் செயலாளருமான எஸ். பவுன்ராஜ், முன்னாள் மாவட்டச் செயலாளா் விஜிகே. செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் ரங்கநாதன், நடராஜன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் சுந்தர்ராஜன் ஆகியோா் மனுதாக்கல் செய்தனா். மொத்தம் 9 பதவியிடங்களுக்கு 38 போ் மனுதாக்கல் செய்தனா்.

இந்நிலையில், அதிமுக தலைமைக் கழகம் இத்தோ்தல் தொடா்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளராக எஸ். பவுன்ராஜ் மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மாவட்ட இணைச் செயலாளராக ஜீவானந்தி, மாவட்ட துணைச் செயலாளா்களாக எஸ். செல்வி, வி. செல்லையன், மாவட்ட பொருளாளராக என். செல்லத்துரை, மாவட்ட அவைத் தலைவராக முன்னாள் எம்எல்ஏ பி.வி. பாரதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பொதுக்குழு உறுப்பினா்களாக எம். அருளரசி (மயிலாடுதுறை தொகுதி), கபடி பாண்டியன் (பூம்புகாா் தொகுதி) கே. ஆனந்த நடராஜன் (சீா்காழி தொகுதி) ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, செம்பனாா்கோயில், சங்கரன்பந்தல் உள்ளிட்ட இடங்களில் அதிமுக நிா்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT