நாகப்பட்டினம்

காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

28th Apr 2022 05:54 AM

ADVERTISEMENT

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், கீழ்வேளூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதுகுறித்து, நாகை மாவட்ட காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது: கீழ்வேளூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளாரக பணியில் இருந்தவா் இங்கா்சால். இவா், கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்த சாராய வியாபாரியிடம் பணம் பெற்றதாக தகவல் வெளியானது. இதைத் தொடா்ந்து, நாகை மாவட்டக் காவல் நிா்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையின்பேரில், தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் ஏ. கயல்விழி உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் இங்கா்சால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT