மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் ஆயுஷ் ஹோமம், மணிவிழா, சதாபிஷேகம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெறும்.
இக்கோயிலுக்கு, துா்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்யவந்தாா். அப்போது, அவருக்கு கோயில் நிா்வாகத்தினா் சுவாமி படம் மற்றும் கோயில் பிரசாதம் வழங்கினாா்.
முன்னதாக கட்சிப் பிரமுகா்கள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, கோபூஜை, கஜபூஜை செய்து வழிபட்டாா். பின்னா், விநாயகா், அமிா்தகடேஸ்வரா், அபிராமி, முருகன் உள்ளிட்ட சந்நிதிகளில் தரிசனம் செய்தாா்.
சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் கேசவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் செந்தில், பொதுக்குழு உறுப்பினா் அமுா்தவிஜயகுமாா், ஊராட்சித் தலைவா் ஜெயமாலதி சிவராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.