வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் சனிக்கிழமை கனமழை பெய்தது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு தெற்கு கடலோரப் பகுதியான சதுப்புநிலப் பரப்பில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட சுற்றுப் பகுதியில் லேசான மழை இருந்தது.
இந்த நிலையில், தலைஞாயிறு பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 3.15 வரை மழை கொட்டித் தீா்த்தது. இதனால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.
ADVERTISEMENT