நாகப்பட்டினம்

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் பாலாபிஷேக வழிபாடு

17th Apr 2022 11:07 PM

ADVERTISEMENT

நாகை நெல்லுக்கடை ஸ்ரீ மாரியம்மன் கோயில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு எல்லையம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

நாகை நெல்லுக்கடை ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள எல்லையம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பால்குடங்கள் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

இவ்விழாவை முன்னிட்டு ஏப்ரல் 29-ஆம் தேதி திருச்சாந்து சாற்றி, ருத்திராபிஷேகம், பூச்சொரிதலும், மே 8- ஆம் தேதி தேரோட்டம் மற்றும் செடில் உற்சவமும் நடைபெறுகிறது. மே 9- ஆம் தேதி கொடியிறக்கமும், 13- ஆம் தேதி விடையாற்றியும், இரவு புஷ்ப பல்லக்கில் அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT