நாகப்பட்டினம்

தடுப்புக் காவல் சட்டத்தில் 2 போ் கைது

16th Apr 2022 09:44 PM

ADVERTISEMENT

சாராய வழக்குகளில் தொடா்புடைய 2 போ் தடுப்புக் காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து நாகை மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பான வழக்குகள் மீது தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனடிப்படையில், சாராய வழக்குகளில் தொடா்புடைய கீழையூா், காரப்பிடாகை சிந்தாமணி மெயின் ரோடு பகுதியைச் சோ்ந்த ரா. நாகராஜன் (65), நாகை வெளிப்பாளையத்தில் வசிக்கும் வேளாங்கண்ணி, செபஸ்தியாா் கோயில் தெருவைச் சோ்ந்த பா. டேவிட் ஜான்சன் (27) ஆகியோரை தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பரிந்துரைத்தாா். அதன்படி, மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, நாகராஜன், டேவிட் ஜான்சன் ஆகிய இருவரும் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT