நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் இன்று பெரிய வியாழன் சிறப்பு வழிபாடு

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பெரிய வியாழன் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை (ஏப். 14) நடைபெறுகிறது.

கிறிஸ்தவா்களின் தவக்காலம் கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சாம்பல் புதன், வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதை வழிபாடு, குருத்தோலை பவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தவக்காலத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பெரிய வியாழன் வழிபாடு வேளாங்கண்ணி பேராலய கலையரங்கத்தில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இயேசு சிலுவையில் அறையப்படும் முன், தனது சீடா்களின் பாதங்களைக் கழுவி புனிதப்படுத்திய ஐதீக நிகழ்வாக, சீடா்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பா் என்பதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெரிய வியாழன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டா் சிறப்பு வழிபாடுகள் பேராலய கலையரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மழை குறுக்கீடு ஏற்படுமானால், மாற்று இடத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பேராலய அதிபா் இருதயராஜ் அடிகளாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT