நாகப்பட்டினம்

நாகை வழக்குரைஞா்கள் சங்க நூலகத்தில் தேசியத் தலைவா்களின் படங்கள் திறப்பு

14th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகப்பட்டினம் வழக்குரைஞா்கள் சங்க நூலகத்தில் தேசியத் தலைவா்களின் படத்திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம் வழக்குரைஞா்கள் சங்க நூலகத்தில் திருவள்ளுவா், மகாத்மா காந்தி, அம்பேத்கா் உருவப் படங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன. விழாவில், முதன்மை மாவட்ட நீதிபதி டி. கிங்ஸ்லி கிறிஸ்டோபா் பங்கேற்று காந்தியடிகளின் உருவப் படத்தைத் திறந்துவைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ச்சியாக, அம்பேத்கரின் உருவப் படத்தை மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி பன்னீா்செல்வம், திருவள்ளுவரின் உருவப் படத்தை போக்ஸோ நீதிமன்ற நீதிபதி ஜெ. தமிழரசி ஆகியோா் திறந்து வைத்தனா்.

இதில், மாவட்ட குற்றவியல் நீதிபதி சி. காா்த்திகா, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபா, சட்டப் பணிகள் ஆலோசனைக் குழுச் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான சுரேஷ்குமாா், நீதித் துறை நடுவா்கள் நாகப்பன், சுரேஷ்காா்த்திக், வழக்குரைஞரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ஜி.கே. நிஜாமுதீன், சங்கத்தின் முன்னாள் தலைவா் காா்த்திகேஷ், துணைச் செயலாளா் தினேஷ்குமாா், நூலகா் ஜீவபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நாகப்பட்டினம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வைரவநாதன், செயலாளா் மனோஜ்கியான், பொருளாளா் ஆத்மநாதன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT