நாகப்பட்டினம்

மழை மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

5th Apr 2022 10:32 PM

ADVERTISEMENT

திட்டச்சேரி அருகே அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மழை மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழாவையொட்டி, கஞ்சி வாா்த்தல் நிகழ்ச்சி, பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தீ குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, அம்மன் வீதியுலா நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT