நாகப்பட்டினம்

எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பெளா்ணமி விழா: முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்

5th Apr 2022 10:31 PM

ADVERTISEMENT

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள சித்ரா பௌா்ணமி பெருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முருகனின் ஆதிபடை வீடான இக்கோயிலில் சித்திரை மாத பௌா்ணமி திருவிழா மற்றும் காவடி அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டுக்கான விழா ஏப்.16-ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, விழாவையொட்டி வியாழக்கிழமை (ஏப்.7) கொடியேற்றமும், ஏப்.15-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறஉள்ளது.

விழாவுக்கான முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் திருக்குவளை வட்டாட்சியா்யில் அலுவலகத்தில், வட்டாட்சியா் கு. சிவகுமாா் தலைமையில் நடைபெற்றது. இதில், கோயில் செயல் அலுவலா் மணவழகன், நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பழனிசாமி, டிஎன்எஸ்டிசி கண்காணிப்பாளா் விஸ்வநாதன், திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலா் அரவிந்த் குமாா், திருப்பூண்டி வட்டார சுகாதார ஆய்வாளா் சுப்பிரமணியன், திருக்குவளை துணை மின்நிலைய உதவி பொறியாளா் பிருந்தா, தலைஞாயிறு தீயணைப்பு அலுவலா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT