நாகப்பட்டினம்

நாகை ஆசிரியா் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிவு

4th Apr 2022 11:02 PM

ADVERTISEMENT

மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் மீது நாகை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

நாகை மாவட்டம், விழுந்தமாவடி, மணல்மேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றுபவா் பால்ஜோசப். இவா் பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலரை தொட்டுப் பேசியதாகவும், கையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவா் நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாா்ச் 26-ஆம் தேதி புகாா் தெரிவித்திருந்தாா். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்தநிலையில், ஆசிரியா் பால்ஜோசப் மீது நாகை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT