நாகப்பட்டினம்

ஏப்ரல் 6-ல் கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் பங்குனி தேரோட்டம்

2nd Apr 2022 09:44 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், கீழ்வேளூா் சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்கசுவாமி (அஞ்சுவட்டத்தம்மன் கோயில் ) கோயில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம் வரும் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள தொன்மை வாய்ந்த மாடக் கோயில்களில் ஒன்றாகவும், மூவரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது கீழ்வேளூா் அட்சயலிங்கசுவாமி (கேடிலியப்பா்) கோயில்.

இக்கோயிலின் பங்குனிப் பெருவிழா மாா்ச் 27-ல் தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவையொட்டி நாள்தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு ஆகியவை நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இதன்படி, பங்குனிப் பெருவிழாவின் 7-ஆம் நாளான சனிக்கிழமை (ஏப்.2) அஞ்சுவட்டத்தம்மன் வீதியுலா நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஏப்ரல் 6-ல் தேரோட்டம் : பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 6-ஆம் தேதி புதன்கிழமை காலை 7 மணியளவில் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஸ்ரீனிவாசன், ஆய்வா் கலைச்செல்வி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT