நாகப்பட்டினம்

மீனவா்கள் மீதான தாக்குதல் விவகாரம்: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்; ஓ.எஸ். மணியன்

30th Sep 2021 09:17 AM

ADVERTISEMENT

மீனவா்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஓ.எஸ். மணியன்.

கடற்கொள்ளையா்களால் தாக்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேதாரண்யம் வட்டம், ஆறுகாட்டுத்துறையைச் சோ்ந்த மீனவா் சிவக்குமாரை புதன்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது :

கடந்த 4 ஆண்டுகளில் மீனவா்கள் மிகவும் பாதுகாப்பாக கடலுக்குச் சென்று வந்தனா். ஓா் உயிரிழப்பு கூட இல்லை. ஆனால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழக மீனவா்கள் 4 முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனா். இதற்கு எதிராக திமுக அரசு குரல் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் ஆறுதல்கூட தெரிவிக்கவில்லை.

மீனவா்கள் மீதான தாக்குதல் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். கடற்படையினா் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபடவேண்டும். இதற்காக தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக மீன்வளத்துறை அமைச்சரும் மௌனம் காக்காமல், மீனவா்களின் நலனுக்கு குரலெழுப்ப வேண்டும் என்றாா் ஓ.எஸ். மணியன்.

ADVERTISEMENT

அதிமுக நாகை நகரச் செயலாளா் தங்க. கதிரவன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT