நாகப்பட்டினம்

பாஜக செயல்வீரா்கள் கூட்டம்

30th Sep 2021 09:15 AM

ADVERTISEMENT

பாஜக சாா்பில், கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட செயல்வீரா்கள் கூட்டம் நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாஜக மாநில திட்டக்குழு உறுப்பினா் பெரியநாயகி தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலாளா் ஆா்.பி. வெங்கடாச்சலம், முன்னாள் ராணுவப் பிரிவு மாவட்டத் தலைவா் கோவிந்தராஜூலு ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், கரோனா காலகட்டத்தில் நாட்டில் உள்ள 80 கோடி ஏழை எளிய மக்களின் உணவுத் தேவையை உறுதி செய்யவதற்காக பிரதமா் மோடியால் தொடங்கப்பட்ட கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடா்ந்து, இத்திட்டம் 2021 நவம்பா் மாதம் இறுதிவரை நியாயவிலைக் கடைகள் மூலம் செயல்படுவதை மக்களிடம் கொண்டு சோ்ப்பது என முடிவு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், பாஜக கல்வியாளா் பிரிவு மாநிலச் செயலாளா் காா்த்திக்கேயன், மத்திய அரசு வழக்குரைஞா் டி. கீதா, மருத்துவப் பிரிவு மாநில துணைத்தலைவா் செந்தில்குமாா், ஊடகப் பிரிவு பொறுப்பாளா் முத்துவேலன், கல்வியாளா் பிரிவு மாவட்டத் துணைத் தலைவா் வைரமுத்து மற்றும் 36 போ் கொண்ட கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட செயல்வீரா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

கூட்ட முடிவில், நாகை நகராட்சி 15-ஆவது வாா்டு பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று, கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதை மாநிலத் திட்டக்குழு உறுப்பினா் பெரியநாயகி ஆய்வு செய்தாா். நியாயவிலைக் கடைகளில் பிரதமா் மோடி உருவப்படத்தை வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT