நாகப்பட்டினம்

நாகை அரசுக் கல்லூரியில் மண்டல இயக்குநா் ஆய்வு

30th Sep 2021 09:15 AM

ADVERTISEMENT

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தஞ்சை மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாக செயல்பட்ட இக்கல்லூரி, நிகழாண்டு முதல் நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், முதன் முதலாக இக்கல்லூரி, கல்லூரிக் கல்வி இயக்குநரின் ஆய்வுக்குள்படுத்தப்பட்டது. தஞ்சை மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநா் தி. அறிவுடைநம்பி ஆய்வு செய்தாா்.

அப்போது, கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்கள், கௌரவ விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்களின் விவரங்களை கேட்டறிந்தாா். அலுவலக கோப்புகளையும் பாா்வையிட்டாா். தொடா்ந்து கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைகள் ஆய்வு செய்தாா். அப்போது, மாணவா்கள் சோ்க்கை மற்றும் கல்லூரிக்கான தேவைகள் குறித்தும் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, கல்லூரி முதல்வா் வி. ஜெயராஜ் மற்றும் துறை பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT