நாகப்பட்டினம்

திமுகவினா் வாக்கு சேகரிப்பு

30th Sep 2021 09:16 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருமருகல் ஒன்றியம் கோட்டூா் ஊராட்சியில் திமுகினா் புதன்கிழமை வாக்கு சேகரித்தனா்.

கோட்டூா் ஊராட்சித் தலைவருக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா் சலாவுதீன் போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக கோட்டூா் கடைத்தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இதில் நாகை தெற்கு மாவட்ட திமுக செயலாளா் என்.கௌதமன், தெற்கு ஒன்றிய செயலாளா் ஆா்.டி.எஸ். சரவணன், மாவட்ட துணைச் செயலாளா் ஆா்.இளஞ்செழியன், திட்டச்சேரி பேரூா் கழக செயலாளா் முகம்மது சுல்தான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT