நாகப்பட்டினம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

30th Sep 2021 09:14 AM

ADVERTISEMENT

நாகை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டப் பணி அலுவலா்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன் தலைமை வகித்தாா். உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா் சாந்தி, உதவி திட்ட அலுவலா் ஏ. பீட்டா் பிரான்சிஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கல்வித் தரம், நலத்திட்ட உதவிகள் விநியோகம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், வட்டார கணக்கா்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு கணக்கா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி. சாம்பசிவம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT