நாகப்பட்டினம்

உயிரிழந்த கட்டுமானத் தொழிலாளரின் குடும்பத்துக்கு விரைவில் நிவாரணம்

30th Sep 2021 09:15 AM

ADVERTISEMENT

கட்டுமானப் பணியின் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு விரைவில் நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

கட்டுமானப் பணியின் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு பணியிடவிபத்து மரணத்தொகை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம், நாகை தொழிலாளா் நல வாரியம் அலுவலகம் முன் செப்டம்பா் 30- ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தை, நாகை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. தொழிலாளா் நல அலுவலா் ஸ்ரீதா், நாகூா் காவல் நிலைய ஆய்வாளா் ராஜேந்திரன், உதவி ஆய்வாளா் ஆா். விஜயலெட்சுமி, ஏஐசிசிடியு தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் எஸ்.வீரச்செல்வன், சிபிஎம்எல் கட்சியின் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா். பால்ராஜ், மாவட்டச் செயலாளா் குணசேகரன் ஆகியோா் பங்கேற்றனர்.

அப்போது, பணியிட விபத்தில் உயிரிழந்த தரங்கம்பரடி வட்டத்தைச் சோ்ந்த டேவிட் குடும்பத்துக்கு அக்டோபா் இறுதிக்குள் பணியிட விபத்து மரணத்தொகை ரூ.5 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், பிற கோரிக்கைகளின் மீது துறைசாா்ந்த நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT