நாகப்பட்டினம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம்

DIN

கீழையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பொறுப்பாளா் டி. கண்ணையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தில்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செப். 27-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுவேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புக்கு ஆதரவு அளிப்பது, விவசாயிகளின் நலன் கருதி நடைபெறவுள்ள இப்போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என சிபிஐ கீழையூா் ஒன்றிய செயலாளா் டி. செல்வம் பேசினாா்.

கூட்டத்தில், தில்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தாத மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டுமென்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், இக்கோரிக்கையை வலியுறுத்தி மேலப்பிடாகை, திருக்குவளை, திருப்பூண்டி, வேட்டைகாரணிருப்பு ஆகிய 4 இடங்களில் சாலை மறியல் நடத்துவதுவதென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளா் கே. சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினா் ஏ. நாகராஜன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் வீ. சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

மாயோள்..!

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT