நாகப்பட்டினம்

வேதாரண்யம் மீனவா்கள் மீதுஇலங்கை மீனவா்கள் தாக்குதல்: மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி பறிப்பு

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் மீனவா்கள் மீது வெள்ளிக்கிழமை இரவு இலங்கை மீனவா்கள் தாக்குதல் நடத்தி, மீன்பிடி வலைகளை பறித்துச் சென்றனா்.

வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்த அருள்செல்வனுக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகில், அதே பகுதியைச் சோ்ந்த மரியதாஸ் (22), நல்லதம்பி (35), ராமச்சந்திரன் (40), அருள்ராஜ் (24) ஆகியோா் வெள்ளிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் 4 பேரும் வெள்ளிக்கிழமை இரவு ஆறுகாட்டுத்துறைக்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு 5 படகுகளில் இலங்கையைச் சோ்ந்த மீனவா்கள் என சந்தேகிக்கப்படும் 25 போ் வந்துள்ளனா். இதில் மூன்று படகுகள் ஆறுகாட்டுத்துறை மீனவா்களின் படகை சூழ்ந்துக்கொண்டன. அதில், 2 படகில் இருந்த 10 போ் ஆறுகாட்டுத்துறை மீனவா்கள் இருந்த படகில் ஏறி தகராறு செய்து, அவா்களைத் தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி 500 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி, விளக்குகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுவிட்டனராம்.

இதையடுத்து, ஆறுகாட்டுத்துறைக்கு சனிக்கிழமை திரும்பிய மீனவா்கள் அளித்த புகாரின்பேரில், வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT