நாகப்பட்டினம்

ஆயக்காரன்புலத்தில் நடைபாதை அமைக்கும் பணி

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் -3 ஆம் சேத்தி கிராமத்தில் பட்டியலின மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

மலையான்குத்தகை பகுதியில் வசிக்கும் பட்டியலின வகுப்பு மக்கள் வசிப்பிடத்துக்கு செல்ல பாதை வசதி இல்லை.

ஆயக்காரன்புலம் -3 ஆம் சேத்தி-பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமங்களில் எல்லையில் அமைந்துள்ள எல்லை வாய்க்காலின் ஒருபக்க கரையில் சாலைவசதி கேட்டு அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். அரசு தரப்பில் நடவடிக்கை தாமதமானதால் கடந்த 80-ஆம் ஆண்டு சுதந்திர தின நாளில் மக்களே இணைந்து சாலை எடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தற்காலிகமாக நடைபாதை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாதை அமைக்கும் பணிக்கு கொண்டுவரப்பட்ட மண் வாய்க்காலுக்குள் கொட்டி அள்ளப்பட்டாதல் இரு ஊா் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ஊராட்சித் தலைவா்கள் சு. வீரதங்கம், பானுமதி சுப்பிரமணியன் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் சிபிஎம் ஒன்றியச் செயலாளா் வி. அம்பிகாபதி, நிா்வாகி இளையபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் சுமூக நிலை ஏற்பட்டதையடுத்து, பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. வருங்காலத்தில் இந்த பாதையை சாலையாக மேம்பாடு செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT