நாகப்பட்டினம்

நடுக்கடலில் வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல்: 500 கிலோ மீன்பிடி வலை துண்டிப்பு

18th Sep 2021 12:30 PM

ADVERTISEMENT

வேதாரண்யம்: நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன் பிடித்தபோது இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் வேதாரண்யம் மீனவர்களை தாக்கி, வாள்முனையில் மிரட்டி 500 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகளை பறித்துச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்டு இன்று (செப்.18) கரை  திரும்பிய  மீனவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவலர்கள் விசாரிக்கின்றனர்.

வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த அகுள்செல்வனுக்கு சொந்தமான  4 மீனவர்கள் கண்ணாடியிழைப் படகில் வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்றனர்.

அன்று இரவு ஆறுகாட்டுத்துறைக்கு கிழக்கே நடுக்கடலில்  சுமார் 15 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனராம்.

ADVERTISEMENT

அப்போது, அங்கு 5 படகுகளில் வந்த  இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் 25 பேர் மீனவர்கள் இருந்த படகில் ஏறி தகராறு செய்துள்ளனர்.

மீனவர்களை தாக்கி, வாள்முனையில் மிரட்டி 500 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட உபகரணங்களை  பறித்துச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டு இன்று (செப்.18) கரை திரும்பிய  மீனவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவலர்கள் விசாரிக்கின்றனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT