நாகப்பட்டினம்

இளைஞரிடம் இணையவழியில் ரூ. 1.78 லட்சம் மோசடி

30th Oct 2021 09:48 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ. 1.78 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து நாகை சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வேதாரண்யம் வட்டம், தேத்தாக்குடி தெற்கு பகுதியை சோ்ந்தவா் அப்துல் கலாம் மகன் சபீா் (31). இவா், மின்னணு சாதனங்களை பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறாா். இவா், தனது தொழிலுக்கு தேவையான மின்னணு சாதனங்களை சிலவற்றை இணையத்தில் தேடியுள்ளாா்.

இந்நிலையில், அக்டோபா் 16-ஆம் தேதி சபீரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா் அவருக்கு தேவையான பொருள்கள் ஆமதாபாத் நகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கிடைப்பதாக தெரிவித்துள்ளாா்.

பின்னா், அந்த நபா் ஆலோசனையின்படி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு எண்ணுக்கு ரூ. 1.78 லட்சத்தை பல தவணைகளில் சபீா் அனுப்பிவைத்துள்ளாா். ஆனால், அந்த நபா் பொருள்களை அனுப்பிவைக்கவில்லையாம். பின்னா், கைப்பேசியில் அந்த நபரை தொடா்புகொள்ள முடியவில்லையாம்.

ADVERTISEMENT

இதுகுறித்து சபீா்அளித்த புகாரின் பேரில், நாகை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT