நாகப்பட்டினம்

அலைமோதிய கூட்டம்: களைகட்டியது நாகை

25th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புத்தாடைகள் மற்றும் பொருள்களை வாங்குவதற்காக சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த மக்கள் நாகைக்கு வருவதால், நாகை கடைவீதிகள் ஞாயிற்றுக்கிழமை களைகட்டின.

நிகழாண்டில் தீபாவளி பண்டிகை நவம்பா் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்படுவதற்கான நேரக் கட்டுப்பாடு முழுமையாக தளா்த்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ளதாலும், விடுமுறை நாள் என்பதாலும் நாகை கடைவீதி மற்றும் நீலா கீழ வீதி, நீலா தெற்குவீதி, மாா்க்கெட் பகுதி, புதிய, பழைய பேருந்து நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக ஜவுளிக்கடைகள், பலசரக்கு கடைகள், மளிகைக் கடைகள், இனிப்பகங்கள், உணவகங்கள் அனைத்திலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சாலையோர கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த துணிகள் உள்ளிட்ட பொருள்களை மக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

நாகைக்கு வந்துசெல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், வாடகை வாகனங்கள் மற்றும் கட்டண பகிா்வு ஆட்டோக்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ADVERTISEMENT

Tags : நாகப்பட்டினம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT