நாகப்பட்டினம்

காா் மோதி ஒருவா் பலி

25th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம் கீழையூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம் விழுந்தமாவடி ஐயனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகையன் (40). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வேளாங்கண்ணியை அடுத்த பூவைத்தேடி பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிா்திசையில் வந்த காா், இவா் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த முருகையன், உயிரிழந்தாா். காரை ஓட்டி வந்த நபா், காரை விட்டுவிட்டு தப்பினாா். காரை கீழையூா் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Tags : திருக்குவளை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT