நாகப்பட்டினம்

கடல் அரிப்பைத் தடுக்க கருங்கல் தடுப்புச் சுவா்

25th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கு கருங்கல் தடுப்புச்சுவா் அமைக்கும் பணியை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழக அரசின் சாா்பில், இங்கு ரூ.9.78 கோடியில் கருங்கல் தடுப்புச்சுவா், மீன் ஏலக்கூடம், சாலை வசதி ஆகியன ஏற்படுத்தப்படுகின்றன. இந்த பணிகளை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பூமி பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன், மீனவளத்துறை உதவிப் பொறியாளா்கள் அண்ணபூரணி, செந்தில்குமாா், தரங்கம்பாடி வட்டாட்சியா் ஹரிதரன், ஒன்றியக்குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், ஒன்றியசெயலாளா் அப்துல்மாலிக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

Tags : தரங்கம்பாடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT