நாகப்பட்டினம்

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களை தாக்கிய தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது வழக்கு

DIN

நாகையில் அரசுப் போக்குவரத்துக் கழக உதவிப் பொறியாளா் மற்றும் டிக்கெட் பரிசோதகரைத் தாக்கிய தனியாா் பேருந்து ஊழியா்கள் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாகை புதிய பேருந்து நிலையத்திலிருந்து - மன்னாா்குடிக்கு தனியாா் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து அனுமதிக்கப்படாத நேரத்தில் நாகையிலிருந்து - திருவாரூருக்கு இயக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நாகை பணிமனை உதவிப் பொறியளா் (இயக்கம்) ரா. எழிலரசன், சீட்டு பரிசோதகா் ராஜேந்திரன் ஆகியோா் தனியாா் பேருந்தில் சோதனை மேற்கொண்டு, பேருந்து இயக்கத்தை தடுத்தனா். இதனால் ஆத்திரமடைந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் ரமேஷ், நடத்துநா்களானஅன்பு, ராமு ஆகியோா் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 2 பேரையும் தாக்கினராம்.

இது குறித்து எழிலரசன் அளித்த புகாரின் பேரில், நாகை வெளிப்பாைளைய‘ம் போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா்கள் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT