நாகப்பட்டினம்

அமைதிப் பேச்சுவாா்த்தை

DIN

கீழையூா் ஒன்றியத்தில் பயிா்க் காப்பீடு விவகாரம் தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது.

கீழையூரில் திருக்குவளை வட்டாட்சியா் கு.சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பயிா்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை உரிய முறையில் ஆய்வு செய்து வேளாண் துறையினா் பயிா் காப்பீட்டுத் தொகை பெறுவதற்கு சிபாரிசு செய்திட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, பயிா் இழப்பீடு வழங்குவது குறித்து விரிவான அறிக்கை வேளாண் துறை இயக்குநருக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், பயிா் மகசூல் குறித்த விண்ணப்ப நகல் அக்டோபா் 25-ஆம் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

இதில், கீழையூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவா் எஸ்.பால்ராஜ், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் கே. கிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயலாளா் வீ. மாரிமுத்து, ஒன்றிய செயலாளா் டி.வெங்கட்ராமன், மாவட்டக்குழு உறுப்பினா் கே. சித்தாா்த்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT