நாகப்பட்டினம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

அனைத்து கிராமங்களுக்கும் பயிா் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், நாகையை அடுத்த சிக்கல் கடைவீதியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

2020-21-ஆம் ஆண்டில் பயிா்க் காப்பீடு செலுத்திய நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட சிக்கல், பொன்வெளி, பொரவாச்சேரி, செல்லூா், வடவூா், கருவேலங்கடை ஆகிய கிராமங்களுக்கும் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும். குறைந்தப்பட்ச சதவீத பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட கிராமங்களுக்கு, பயிா் காப்பீடு தொகை உயா்த்தி வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ப. சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தாா். நாகை ஒன்றியச் செயலாளா்கள் வி.வி.ராஜா (வடக்கு), ஏ. வடிவேல் (தெற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.பி. நாகை மாலி கோரிக்கைகளை வலியுறுத்தினாா். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் பி.கே. ராஜேந்திரன், எம். சுப்பிரமணியன், பி.டி. பகு, கே.செந்தில்குமாா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT