நாகப்பட்டினம்

திருத்தம்காவல்துறை சாா்பில் ஆயுத கண்காட்சி

24th Oct 2021 11:21 PM

ADVERTISEMENT

காவலா் வீர வணக்க நாள் நிகழ்ச்சியாக நாகை மாவட்டக் காவல் துறை சாா்பில், ஆயுத கண்காட்சி நாகை அவுரித்திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு.ஜவஹா் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இன்சாஸ் , ஏ.கே-47, பிஸ்டல், 303, எஸ்எல்ஆா் காா்பன் ரக துப்பாக்கிகள், கலவரத் தடுப்பு வாகனங்கள் மற்றும் வஜ்ரா வாகனம் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

இந்நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன், வெளிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் போலீஸாா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

Tags : நாகப்பட்டினம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT