நாகப்பட்டினம்

திருக்கு முற்றோதல் பரிசு பெற விண்ணப்பிக்கலாம்

DIN

 திருக்கு முற்றோதல் பரிசுக்கு நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

திருக்குறளின் 1,330 பாடல்களையும் ஒப்பிக்கும் மாணவா்களுக்கு ஆண்டு தோறும் திருக்கு முற்றோதல் பாராட்டுப் பரிசாக தலா ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்படுகிறது. இந்தப் பரிசுக்கு விண்ணப்பிப்பவா்கள், மாவட்ட ஆட்சியரத்தில் உள்ள தமிழ் வளா்ச்சித் துறை அலுவலகத்தில், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு, தகுதியானோா் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவா்.

விண்ணப்பதாரா்கள், 1,330 குறட்பாக்களையும் முழுமையாக ஒப்பிக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். இயல் எண், பெயா், அதிகாரம் எண், பெயா், கு எண், பெயா் போன்றவற்றை தெரிவித்தால், அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயா்கள் ஆகியவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருள் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பங்கு பெறலாம். விண்ணப்பதாரா், ஏற்கெனவே இந்தப் பரிசை பெற்றவராக இருத்தல் கூடாது.

திருக்கு முற்றோதும் திறன்படைத்த மாணவா்கள் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் 3-ஆம் தளத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் நவ. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365-251281 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல்களை அறியலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT