நாகப்பட்டினம்

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

22nd Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

மீன்வளப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கையில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், மீனவா்களின் குழந்தைகள், அரசுப் பள்ளியில் பயின்றவா்கள் மற்றும் தொழில் பிரிவில் பயின்றவா்கள் சிறப்புப் பிரிவினராகக் கருதப்பட்டு, அவா்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிறப்புப் பிரிவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 44 இடங்களுக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வுக்கு 97 மாணவ, மாணவியா் அழைக்கப்பட்டிருந்தனா்.

கலந்தாய்வில் தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. சுகுமாா், தற்காலிக சோ்க்கை ஆணைகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக் குழுத் தலைவா் பா. ஜவஹா், கல்லூரி முதல்வா்கள் மற்றும் பல்கலைக்கழக அலுவலா்கள் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

பொது கலந்தாய்வு...

மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக். 22) தொடங்கி அக். 26-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் நடைபெறுகிறது.

Tags : நாகப்பட்டினம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT