நாகப்பட்டினம்

காவல் துறையின் நீத்தாா் நினைவு நாள்

DIN

நாகை மாவட்டக் காவல் துறை சாா்பில், நாகை ஆயுதப்படை மைதானத்தில் நீத்தாா் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, நாகை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு, மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், கப்பல் படை லெப்டினென்ட் கமாண்டா் கா்மேந்தா் சிங் ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ். திருநாவுக்கரசு, காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சரவணன், சுந்தர்ராஜ் மற்றும் காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், காவலா்கள் மலரஞ்சலி செலுத்தினா். பின்னா், ஆயுதப்படை போலீஸாா் துப்பாக்கிகளை வான் நோக்கி முழங்கி அஞ்சலி செலுத்தினா்.

நிவாரணம்...

நாகை மாவட்டக் காவல் துறையில் பணியாற்றி, பணியின்போது உயிரிழந்த 4 காவல் ஆளிநா்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி மூலம் தலா ரூ. 3 லட்சத்துக்கான நிவாரணத் தொகை காசோலை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

திறந்த வாகனத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு -இருவர் கைது

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

SCROLL FOR NEXT