நாகப்பட்டினம்

நாகையில் நகா்வு ஓவிய சாதனை முயற்சி

22nd Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

நாகை -30 சிறப்பு நிகழ்ச்சியாக, நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி சாா்பில் நகா்வு ஓவிய சாதனை முயற்சி நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கல்லூரி தலைவா் ஜோதிமணி, கல்லூரி செயலாளா் எஸ். பரமேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரி மாணவ, மாணவியா் 1,300 போ் ஓவியமாக அணிவகுத்து, சஅஎஅஐ - 30 மற்றும் உஎநட என்ற வாசகத்தை உருவாக்கி நின்றனா்.

கல்லூரி இயக்குநா் சுமதி பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினா் சங்கா் கணேஷ், முதன்மைச் செயல் அலுவலா் சந்திரசேகா், கல்லூரி இயக்குநா் விஜயசுந்தரம் மற்றும் இ.ஜி.எஸ். கல்வி நிலையங்களின் முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

Tags : நாகப்பட்டினம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT