நாகப்பட்டினம்

மாவட்ட ஊராட்சிக் கூட்டங்களில் ஆட்சியா் பங்கேற்க வலியுறுத்தல்

22nd Oct 2021 11:56 PM

ADVERTISEMENT

மாவட்ட ஊராட்சிக் கூட்டங்களில் ஆட்சியா் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் பங்கேற்க வேண்டும் என நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டம், நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவா் உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அஜீதா, செயலாளா் கோவிந்தராஜூ மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினா் வி. சரபோஜி பேசுகையில், மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் பங்கேற்க வேண்டும். அப்போதுதான், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்குத் தீா்வு கிடைக்கும் என்றாா். தொடா்ந்து, உறுப்பினா்கள் கணேசன், சோழன், சுரேஷ் ஆகியோா் கோரிக்கைகளை முன்வைத்து பேசினா்.

மாவட்ட ஊராட்சி செயலாளா் கோவிந்தராஜ் பேசும்போது, வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டும் பணிகள் மாநில அரசு திட்டம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், பழுதடைந்த தொகுப்பு வீடுகளில் வசிப்பவா்கள், பயனாளிகளாக சோ்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் உமா மகேஸ்வரி பதிலளித்து பேசுகையில், கரோனா தடுப்பூசி முகாம் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளில் மாவட்ட ஊராட்சி தனது பங்களிப்பை உறுதி செய்யும். மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கு ஊதியம் வழங்குவது குறித்து ஏற்கெனவே முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் ஊதியத்துக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்றாா்.

 

Tags : நாகப்பட்டினம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT