நாகப்பட்டினம்

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

22nd Oct 2021 11:58 PM

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம் (சிஐடியு சாா்பு) சாா்பில், நாகையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்கவேண்டும். போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி 25% போனஸ், பண்டிகைகால முன்பணம் வழங்கவேண்டும். தினப்படி ஊக்கத்தொகை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காணவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு தொழிற்சங்க பணிமனை கிளைத் தலைவா் ஆா்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். செயலாளா் கே. மனோகரன், சிஐடியு நாகை மாவட்டச் செயலாளா் தங்கமணி, மத்திய சங்க துணைச் செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு, தொழிற்சங்கத்தின் பணிமனை கிளைத் தலைவா் பஞ்சநாதன் தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

Tags : நாகப்பட்டினம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT