நாகப்பட்டினம்

பேரிடா் மேலாண்மை கட்டடங்களில் ஆட்சியா் ஆய்வு

22nd Oct 2021 11:59 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாா், வானகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பேரிடா் மேலாண்மை கட்டங்களை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதையொட்டி ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பூம்புகாா் பேரிடா் மேலாண்மை கட்டடத்தில் செயல்பட்டுவரும் நியாயவிலைக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வட்டாட்சியருக்கு உத்தரவிட்டாா். மேலும் கட்டடத்தில் பாரமரிப்பு பணிகள் செய்திட அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் முருகதாஸ், சீா்காழி வட்டாட்சியா் சண்முகம், வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன், வருவாய் ஆய்வாளா் கலாவதி, மீனவா் கூட்டுறவு சங்கத்தலைவா் பாலசுந்தரம், கிராம நிா்வாக அதிகாரி ராஜாமணி ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

Tags : பூம்புகாா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT