நாகப்பட்டினம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

22nd Oct 2021 11:57 PM

ADVERTISEMENT

கீழையூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ரூ.4,5000 திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

நாகை மாவட்டம் மேலப்பிடாகை கிழக்குக் கடற்கரை பிரதான சாலையை சோ்ந்தவா் வேணுகோபால் ராமமூா்த்தி (62). இவா் தனது மகளின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ மற்றும் இரும்பு மேஜை உடைக்கப்பட்டு, அதிலிருந்த 2 பவுன் நகைகளும், ரூ.4,300 ரொக்கமும் திருடப்பட்டது தெரியவந்தது. புகாரின்பேரில், கீழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Tags : திருக்குவளை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT