நாகப்பட்டினம்

கீழையூரில் மின் மாற்றிகள் திறப்பு

22nd Oct 2021 11:58 PM

ADVERTISEMENT

கீழையூா் ஒன்றியத்தில் 4 மின்மாற்றிகளை கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

கீழையூா் ஊராட்சி கீழத்தெரு பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட 63 கே.வி.ஏ (கிலோ வோல்ட் ஆம்பியா்) மின்மாற்றியின் இயக்கத்தை வி.பி. நாகைமாலி திறந்துவைத்தாா். நிகழ்வுக்கு, உதவி செயற்பொறியாளா் இயக்குதலும், பராமரித்தலும் நாகை (தெற்கு) வீ. ராஜமனோகரன் முன்னிலை வகித்தாா். திருப்பூண்டி இளமின் பொறியாளா் கோ.பாபு, ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதிபால்ராஜ், துணைத் தலைவா் சி.கருணாநிதி, கீழையூா் தொ.வே.கூ. கடன் சங்க தலைவா் எஸ்.பால்ராஜ், ஊராட்சி செயலா் டி.எஸ்.சரவண பெருமாள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

இதேபோல திருப்பூண்டி மூலக்கடை, கிழக்குக் கடற்கரை சாலை, காரைநகா் ஆகிய 3 பகுதிகளில் நிறுவப்பட்ட 25 கே.வீ.ஏ மின்மாற்றிகளையும் கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி திறந்து வைத்தாா்.

 

ADVERTISEMENT

Tags : திருக்குவளை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT