நாகப்பட்டினம்

நுண்ணூட்டச் சத்து பூங்கா தொடக்க விழா

22nd Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம் திருக்குவளை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நுண்ணூட்டச் சத்து பூங்கா தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி திருக்குவளையில் சுமாா் 16, 000 சதுர அடி பரப்பில் ஊட்டச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த மரக்கன்றுகள் இயற்கை உரமிட்டு நடவு செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.

வேதாரண்யம் கோட்டாட்சியா் து.துரைராஜ், திருக்குவளை வட்டாட்சியா் கு.சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தனி வட்டாட்சியா் கே. காா்த்திகேயன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் இரா.திலகா, திருக்குவளை ஊராட்சித் தலைவா் இல.பழனியப்பன், வனம் தன்னாா்வ அமைப்பின் நிறுவனா் வனம்.கலைமணி, திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் புலமுதல்வா் எம். துரைராசன், குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் எஸ்.சித்ரா, மண்டல துணை வட்டாட்சியா் வடிவழகன், தோட்டக்கலை அலுவலா் ரெ.ஜெயகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

Tags : திருக்குவளை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT