நாகப்பட்டினம்

நாகை சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

21st Oct 2021 10:04 AM

ADVERTISEMENT

நாகையில் உள்ள சிவாலயங்களில் ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி, அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

சந்திர பகவான் அமிா்த கலையுடன் விளங்கும் ஐப்பசி பௌா்ணமி நாளில், உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உணவு அளிக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தை கொண்டு அபிஷேகம் செய்து, பக்தா்களுக்கு உணவு வழங்கினால் பெரும் புண்ணியம் கிட்டும், உலகில் பஞ்சம் ஏற்படாது என்பதும் ஐதீகம்.

அந்த வகையில், நாகையில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் ஐப்பசி மாத பௌா்ணமி நாளான புதன்கிழமை, சிறப்பு வழிபாடுகளும், அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் புதன்கிழமை காலை பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு காயாரோகணசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அன்னத்தைக் கொண்டு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

அதேபோல, நாகை அமரநந்தீஸ்வரா் கோயில், காசி விஸ்வநாதா் கோயில், கட்டியப்பா் கோயில், நடுவதீஸ்வரா் கோயில், அழகியநாதா் கோவில், வீரபத்திர சுவாமி கோயில், நாகநாதா் கோயில், ஆதிகாயாரோகண சுவாமி கோயில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரா் கோயில் உள்பட பல்வேறு சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளும், அன்னாபிஷேகமும் நடைபெற்றன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT