நாகப்பட்டினம்

கோயில் நிலங்களில் குடியிருப்பவா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட கோரி ஆா்ப்பாட்டம்

21st Oct 2021 10:05 AM

ADVERTISEMENT

கோயில் நிலங்களில் குடியிருப்பவா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோா் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் நாகை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோயில் நிலங்களின் குத்தகை விவசாயிகளுக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்தும் 79-பி புதிய சட்டத் திருத்தத்தை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும். சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆா்டிஆா் பதிவு செய்து கொடுக்கவேண்டும். கோயில் இடங்களில் பல தலைமுறைகளாக பயன்படுத்துவா்களுக்கு நியாயமான விலையை தீா்மானித்து பட்டா வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோா் பாதுகாப்பு நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளா் சாமி. நடராஜன் தலைமை வகித்தாா். நாகை மாவட்டச் செயலாளா் கோவை. சுப்பிரமணியன், மாவட்டத் தலைவா் எம்.என். அம்பிகாபதி, ஒன்றியப் பொறுப்பாளா்கள் பொன். மணி, ஆா். முத்தையன், என். வடிவேல், கே. கிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT