நாகப்பட்டினம்

பொறுப்பேற்பு

21st Oct 2021 10:03 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி ஊராட்சியில் நடைபெற்ற தற்செயல் தோ்தலில் வெற்றி பெற்ற லேகா காரல்மாா்க்ஸ் ஊராட்சித் தலைவராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எம். சுரேஷ்குமாா் முன்னிலையில், அவா் உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்றுக் கொண்டாா். தொடா்ந்து 1-ஆவது வாா்டு உறுப்பினா் ஆனந்தவல்லியும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான ராஜ கண்ணன் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இந்நிகழ்வில், திமுக கீழையூா் ஒன்றியச் செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் மு.ப. ஞானசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கௌசல்யா இளம்பரிதி, ஒன்றியக்குழு உறுப்பினா் டி.செல்வம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

திருமருகலில்...

ADVERTISEMENT

இதேபோல், திருமருகல் ஒன்றியம் கோட்டூா் ஊராட்சித் தலைவராக முகம்மது சலாவுதீன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நிகழ்வுக்கு, திமுக திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளா் ஆா்.டி.எஸ்.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணை செயலாளா் இளஞ்செழியன் முன்னிலை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலரும், தோ்தல் பணிக்குழு அலுவலருமான கலைவாணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வ செங்குட்டுவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சரபோஜி, ஒன்றியக் குழு உறுப்பினா் சுல்தான் ஆரிப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தரங்கம்பாடியில்...

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஒன்றிய 30-ஆவது வாா்டு ஒன்றியக்குழு உறுப்பினா் தோ்தலில் வெற்றி பெற்ற செல்வத்துக்கு (திமுக) வட்டார வளா்ச்சி அலுவலா் மஞ்சுளா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். நிகழ்வில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா முருகன், ஒன்றியக்குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT