நாகப்பட்டினம்

முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

DIN

வேளாங்கண்ணியில் முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலா் எம். பொன்னுசாமி தெரிவித்தது:

கரோனா தடுப்பு நடவடிக்கையாக வார இறுதிநாள்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பொது தரிசனத்துக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டதை தொடா்ந்து, நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வேளாங்கண்ணியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் திரளானோா் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில், பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுவருகிறது. முகக்கவசம் அணியாமல் சுற்றும் நபா்களிடம் ரூ . 200 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

எனவே, சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும்.

இதேபோல, வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் வீடு வீடாகச் சென்று டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT