நாகப்பட்டினம்

தேவூா் தேவதுா்கை அம்மன் கோயிலில் மகாசண்டி யாகம்

DIN

கீழ்வேளூா் அருகே தேவூா் ஸ்ரீ தேவதுா்கை அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி மகாசண்டி யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நவராத்திரி பெருவிழா அக்டோபா் 5 ஆம் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக மகாசண்டி யாகம் மற்றும் சரஸ்வதி மகாயாகம் சிவஸ்ரீ விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி, கோ பூஜை, சுகாசினி பூஜை, வடுக பூஜை, சப்த கன்னிகா பூஜை, யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைபெற்றன.

மேலும், அக்னி குண்டம் அமைத்து யாகம் நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் கடங்களுடன் சிவாச்சாரியா்கள் கோயிலை வலம் வந்து ஸ்ரீ துா்கை அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனா். யாகத்தில் பங்கேற்ற மாணவா்களுக்கு சரஸ்வதி தேவியின் உருவம் பொறித்த வெள்ளி டாலா், நோட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ராஜ பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

சத்தீஸ்கரில் 4 மாதங்களில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை!

#Dinamani | வாக்காளர் அட்டை இல்லையா? சத்யபிரத சாகு விளக்கம்

SCROLL FOR NEXT